கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நாளை (இன்று) கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும். பஸ், ஆட்டோக் கள் ஓடும் என கலெக்டர் சீத்தாராமன் கூறினர். அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தியும், கடிதம் எழுதியும் உள்ளார். சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கிலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து உதவி தொழிலாளர் கமிஷனர் நாள் குறித்து அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத் துப் பேசும் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி.,க்கு வேலைக்கு செல்பவர் களை தடுப்பது, போக்குவரத்தை தடை செய்வது, நிறுவனத்திற்கு வரும் பொருட்களை தடை செய் வது, சுரங்கப் பணிகளை தடை செய்வது கூடாது. இது தொழிற்சாலையுடைய பிரச்னை. இதனால் மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது சரியானதல்ல. கடையடைப்பு நடத்துவதால் பண் டிகை நாட்களில் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
எனவே இந்த போராட் டத்தை தவிர்க்க வேண்டுகிறேன். பஸ்கள் நாளை (இன்று) வழக்கம் போல் ஓடும். கடைகள் திறந்திருக்கும். கடைகளை மூடுமாறு கூறினாலோ, பொது சொத்துக்களை சேதப்படுத் தினாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். இவற்றை கண்காணிப்பதற்காக 19 தாசில் தார்கள் வாகனங்களில் ரோந்து வருவர். நாளை அலுவலகங்களில் விடுமுறை எடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறினார். டி.ஆர்.ஓ., நடராஜன் உடனிருந்தார்.
2,800 போலீசார் பாதுகாப்பு: எஸ்.பி., தகவல் : எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் கடைகளை திறக்கவும், பஸ்களை இயக்கவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மாவட் டத்தை ஆறு பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு சப் டிவிஷனிலும் ஒரு எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்ட எஸ்.பி., க்கள் தலைமை தாங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் 10 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 15 டி.எஸ்.பி.,க்கள், 300 எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படை போலீசார் 2000 பேர் உட்பட 2800 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர். வடக்கு மண்டல ஐ.ஜி., ரமேஷ் குடவாலா வருகை தர உள்ளார். எனவே, வணிகர்கள் பயப்பட வேண்டாம். பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடப்பதாக அறிந் தால் உடனே போலீசாருக்கு தகவல் தரலாம். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.
Source: Dinamalar
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
No comments:
Post a Comment