புவனகிரி : தபால் அலுவலகங்களில் தமிழில் புகார் பெட்டி வைக்க புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைமை தபால் அதிகாரிக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து சட்ட ஆலோசகர் குணசேகரன் அனுப்பியுள்ள மனு: கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களின் பணி நேரம் காலை 9.30 மணி என்பதை 7.30 மணி என பணி நேரத்தை மாற்றி விட்டதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது சேமிப்பு பணம் கட்டவும், எடுக்கவும் அஞ்சல் அலுவலகத்திற்கு வருவதில் சிரமம் உள்ளது.
மேலும் அனைத்து தபால் அலுவலகங்களிலும் புகார் பெட்டி தமிழில் எழுதி வைக்க வேண்டும். அதுபோல் தபால் அலுவலகத்தில் ஊழல் செய்யும் அலுவலர்கள் குறித்த புகாரினை தெரிவிக்க அதிகாரியின் பெயர்,விலாசம், தொலைப்பேசி எண் ஆகியவற்றை தமிழில் எழுதி அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலிலும் விளம்பர பலகை வைக்க வேண்டும்.
Source: Dinamalar

No comments:
Post a Comment