Islamic Widget

September 26, 2010

பூமிக்கடியில் தங்கம்-பிளாட்டினம்? கீழ்க்கட்டளை-ஜமீன் பல்லாவரத்தில் நிலம் வாங்க-விற்க தடை; ஆசைபட்டு அடிமாட்டு விலைக்கு வாங்கினாலும் பதிவு செய்ய முடியாது

என்ன பாடுபட்டாவது அரை கிரவுண்டு நிலம் வாங்க வேண்டும் என்று சென்னையில் ஓடாய் உழைப்பவர்கள் பல லட்சம் பேர். இவர்களில் சிலர் ஓய்வு பெறுவதற்குள் நிலமோ அல்லது பிளாட் வீடோ வாங்கி தங்கள் ஆசை கனவை நிறைவேற்றி விடுகிறார்கள்.

பலரது வாழ்க்கையில் இந்த ஆசை நிறைவேறாமலேயே போய் விடுகிறது. சம்பாதித்த பணத்தையெல்லாம் வாடகையாய் கொடுத்து தொலைத்தவர்கள், வங்கி கடன் வாங்கி, மனைவியின் தாலிச் சங்கிலி வரை விற்று வீடு வாங்குகிறார்கள்.


அப்பாடா... ஒரு வழியாக வீடு வாங்கிட்டோம். இனி சம்பளத்தை வைத்து குடும்பத்தை ஓட்டலாம் என்று நிம்மதி பெறுமூச்சு விடுகிறார்கள். இந்த நேரத்தில் குடியிருக்கும் வீட்டையே இடிக்கப் போகிறார்கள். விற்கவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும்? இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கீழ்க்கட்டளை, ஜமீன் பல்லாவரம் பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கீழ்க்கட்டளை, ஜமீன் பல்லாவரம் பகுதியில் பூமிக்கு அடியில் தங்கம், பிளாட்டினம் புதைந்து கிடக்கிறதாம். விரைவில் தங்க சுரங்கம் தோண்ட போகிறார்களாம். எனவே வீடுகளை இடித்து விடுவார்கள். விற்கவும் முடியாது என்று கிளம்பி இருக்கும் தகவல் தான் இந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதனால் பலர் அடிமாட்டு விலைக்கு தங்கள் நிலங்களை விற்கவுமதுணிந்து விட்டனர். ஆனால் விலை கொடுத்து வாங்கினாலும் பத்திரப்பதிவு செய்ய முடியாது. அன்புநகர், அன்புநகர் விரிவு, சுப்பிரமணியநகர், பல்லவா கார்டன், பெருமாள் நகர், பல்லாவரம், கீழ்க்கட்டளை, ஜமீன் பல்லாவரம், நன் மங்கலம் ஆகிய பகுதிகளில் நிலம் வாங்கினால் பதிவு செய்ய தடை இருப்பதாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் தங்கச்சுரங்கம் வரப்போவது உறுதி என்ற பீதி உச்சகட்டத்தை எட்டி உள்ளது. மக்களின் இந்த பீதியை பயன்படுத்தி தேர்தலுக்கு பிறகு இடங்களை கையகப்படுத்தி விடுவார்கள் என்று அரசியல் கட்சிகளும் ஊதி பெரிதாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இறங்கிவிட்டன. பாவம் மக்கள்.
என்ன நடக்கப்போகிறதோ என்ற பீதியில் தினம் தினம் செத்து பிழைத்த கதை தான். ஆனால் உண்மை நிலை வேறு. மலை சார்ந்த பகுதிகளில் சுமார் 300 மீட்டர் சுற்றளவில் தங்கம், பிளாட்டினம் போன்ற கனிம வளங்கள் புதைந்து கிடப்பதால் அந்த பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்த தடை உத்தரவுக்கு உள்ளாட்சி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுபற்றி பல்லாவரம் நகராட்சி தலைவர் இ.கருணாநிதி கூறியதாவது:-



மலை சார்ந்த பகுதியில் 100 மீட்டர் தூரம் வரை கட்டிடங்கள் கட்ட தடை விதித்தும், 100-ல் இருந்து 300 மீட்டர் தூரம் வரை கட்டுமான பணிகளுக்கு தொல்லியல் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சர்வே எண்கள்: 6 (பகுதி), 24 (பகுதி), 25, 26, 27 (பகுதி), 28 (பகுதி), 33, 34, 38, 39, 41, 50, 55, 57, 58, 59, 60, 61, 62, 64, 65, 66, 67, 68 (பகுதி), 69 (பகுதி) தடை செய்யப்பட்ட பகுதி சர்வே எண்கள்: 275 (பகுதி), 276 (பகுதி), 277 (பகுதி), 278, 279 (பகுதி), 297 (பகுதி) தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வே எண்கள்: 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 (பகுதி), 27, (பகுதி) 28 (பகுதி), 29, 30, 31, 32, 35, 36, 37, 40 (பகுதி), 41 (பகுதி), 42 (பகுதி), 43, 44, 49 (பகுதி), 50 (பகுதி), 52 (பகுதி), 53 (பகுதி), 54, 68 (பகுதி), 69 (பகுதி), 71 (பகுதி), 72 (பகுதி), 73 (பகுதி), 74, 75, 76, 77, 78, 87 (பகுதி), 88 (பகுதி), 154 (பகுதி), 155 (பகுதி), 156 (பகுதி), 157, 158, 159, 160, 170, 171, 172 (பகுதி), 176 (பகுதி). கீழ்க்கட்டளை கிராமம் 101 மீட்டர் முதல் 300 மீட்டர் சுற்றளவு வரை உள்ள பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடையில்லா ஆணை தொல்லியல் துறையில் வாங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இந்த பகுதியில் கடந்த 60 வருடங்களாக குடியிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர் வசதி, தெருவிளக்குகள், தொலைபேசி வசதி என அனைத்து வசதிகளும் அரசு துறைகள் மூலமாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மனை பிரிவு களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் நகராட்சியால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அரசின் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, தடை செய்யப்பட்ட பகுதி என்பதிலிருந்தும், தடையின்மை சான்று பெற்று கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்பதிலிருந்தும் விலக்களித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று நகரசபை கூட்டத்தில் கடந்த மாதம் 31-ந் தேதியே தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment