Islamic Widget

December 13, 2011

சவூதி: மதீனா சாலை விபத்தில் 18 பேர் பலி; 32 காயம்

மதீனா நகரின் தெற்கே டாஹ் சாலையில் வெளிநாட்டுப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எதிரே வந்த சிமெண்ட் ட்ரக் ஒன்றுடன் மோதியதில் இதுவரை 18 பேர் பலியானதாகவும், 32 பேர் காயமுற்றதாகவும், அவர்களில் இருபது பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சவூதி அரேபிய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பேருந்தும், டிரக்கும் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவை என்றும், அவை யிரண்டுமே மதீனா நகரின் குடிநீர் வாரியத்துக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டவை என்றும் காவல்துறை குறிப்பொன்று கூறுகிறது. விபத்தில் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தியர்கள், எத்தியோப்பியர்கள் மற்றும் வங்கதேசத்தவர்களாவார்கள்.

அந்தப் பேருந்தை இயக்கிய 20 வயதுடைய சவூதி ஓட்டுநர் சற்றே கண்ணயர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அந்த ஓட்டுநரும் கடுங்காயம் அடைந்துள்ளதாகவும், அவருடன் வந்த சிறுகுழந்தை காயம் ஏதுமின்றி தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தப் பேருந்தில் இருந்த 44 பயணிகளும் பணிமுடித்து இருப்பிடம் திரும்பும் போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். காயமடைந்தவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் முழுவீச்சில் ஏற்பாடு செய்யும்படி மதீனா மாகாண ஆளுநர் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் மாஜித் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment