August 11, 2010
பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் வாலிபர் சாவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே மர்மமான முறையில் சமையல் கொட்டகை தீ பிடித்து மாற்றுத் திறனாளி வாலிபர் இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பானு. இவரது மகன் அருள் (23). மாற்றுத் திறனாளி. இவர் கடந்த 2ம் தேதி வீட்டு எதிரே உள்ள கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மர்மமான முறையில் கொட்டகை எரிந்ததில் அருள் தீயில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அருள் நேற்று இறந்தார்.இதுகுறித்து பானு கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- நோன்பு கஞ்சி செய்முறை
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- முஸ்லிம்களின் ஒட்டு யாருக்கு: துண்டு பிரசுரம் விநியோகம்!
- ரமளான் கரீம்
No comments:
Post a Comment