July 26, 2010
சென்னையில் சவுதி விமான இன்ஜினில் தீ : 180 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கம்
இன்று மதியம் 12.15 மணி அளவில் சென்னையில் இருந்து ஜெட்டா நோக்கி புறப்பட்ட சவுதி ஏர்வேஸ் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இந்த விபத்து தவிர்க்கப்பட்டதால் 180 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சவுதி ஏர்வேஸ் எஸ்.வி., 769 விமானம் வழக்கம்போல் புறப்படும் போது இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இந்த தகவல் பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பைலட் சாதுர்யமாக விமானத்தை எடுத்து செல்லாமல் மீண்டும் தரையில் இறங்கினார். பயணிகள் அவசர. அவசரமாக இறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். விமானம் சோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தொழில் நுட்ப கோளாறு தான் காரணமாக இருக்கும் என முதலில் வந்துள்ள செய்தி தெரிவிக்கிறது என்று தினமலர் இணையத்தளத்தில் சற்று முன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment