July 21, 2010
1.கடலூர் பாரதி சாலையில் மீண்டும் "மெகா' பள்ளம்
கடலூர்: கடலூரில் போக்குவரத்து மிகுந்த பாரதி சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதித்து வருகிறது. கடலூரில் போக்குவரத்து மிகுந்த பாரதி சாலையில் உட்லண்ட்ஸ் ஓட்டல் சிக்னல் அருகே பூமிக்கடியில் செல்லும் குடிநீர் குழாயில் கடந்த 4ம் தேதி உடைப்பு ஏற்பட்டு தார் சாலை ஐந்து அடி ஆழத் திற்கும், நான்கு அடி அகலத்திற்கும் உள்வாங்கியது. உடைப்பு பகுதியில் போலீசார் தடுப்பு கட்டைகளை போட்டு தடை செய் தனர். நகராட்சி ஊழியர் கள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, பள்ளத்தில் மணலை கொட்டி சாலை மட் டத் திற்கு கான்கிரீட் கலவை கொட்டி சமப்படுத்தி கடந்த 15ம் தேதி முதல் வாகனங்கள் செல்லத் துவங்கின. இந்நிலையில் கடந்த 4ம் தேதி பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மீண்டும் மூன் றடி ஆழத்திற்கு சாலை உள் வாங்கியது. போக்குவரத்து மிகுந்த நேரத்தில் சாலை உள்வாங்கியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்து பாதித்தது. உடன் போக்குவரத்து போலீசார் சாலை உள் வாங்கிய பகுதியில் தடுப்பு ஏற்படுத்தினர்.கடந்த 4ம் தேதி சாலை உள் வாங்கிய பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை முழுமையாக சரி செய்யாததாலும், பள்ளத்தை முறையாக மூடி "கான்கிரீட்' போடாததாலும் தற்போது மீண்டும் சாலை உள்வாங்கியது. ismailpno
Subscribe to:
Post Comments (Atom)
- மதீனாவின் சிறப்பு
- (no title)
- இந்தியாவின் முதல் முஸ்லிம் தலைமைத் தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி இன்று பொறுப்பேற்கிறார்.
- மீட்பு பணியில் ராணுவம்
- பரங்கிபேட்டையில் பரபரபு பள்ளி மாணவர்களுக்கிடையே தகராறு போலிஸ் நிலையம்முற்றுகை!
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தனியே பிரிந்தது ரயில் இன்ஜின்; பெரிய விபத்து தவிர்ப்பு
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தேர்தல்களம்
- வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
No comments:
Post a Comment