Islamic Widget

April 03, 2012

ஹஜ் மானியம் ரத்து?

சவுதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு ஹஜ் பயணம் செய்வது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வருடம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படும்.இந்த ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக மத்திய அரசு மானிய உதவி அளித்து வருகிறது. அரசு ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்களுக்கு மட்டும் இந்த மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் சேவைகளில் செல்பவர்களுக்கு இந்த உதவி கிடைக்காது.

ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யுமாறு பல இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. இதனை மத்திய அரசு ஆலோசித்து வருவதுடன், பல அமைப்புகளிடமும் கருத்து கேட்டு வருகிறது. இது சம்பந்தமாக இன்று கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,” ஹஜ் பயணத்துக்கான மானியம் ரத்தாகலாம்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment