Islamic Widget

April 03, 2012

நாளை துவங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு



கடலூர் : நாளை (04.04.2012) துவங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 307 மாணவிகள் உட்பட 38 ஆயிரத்து 150 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். மாவட்டத்தில் மாணர்களை விட மாணவிகள் 464 பேர் கூடுதலாக தேர்வு எழுதவுள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாளை 4ம் தேதி துவங்குகிறது. இதில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 544 மாணவர்களும், 13 ஆயிரத்து 184 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 728 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மாணவர்களை விட மாணவிகள் 640 பேர் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தவிர தனித்தேர்வர்கள் 357 பேர் புதிய (சமச்சீர்) பாடதிட்டத்திலும், 2,186 பேர் பழைய பாடத்திட்டத்திலும் 183 பேர் மெட்ரிக் பாடத்திட்டதிலும் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக மொத்த 72 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேப்போன்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 6,299 மாணவர்கள், 6,123 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 422 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களில் புதிய (சமச்சீர்) பாடத்திட்டத்தில் 187 பேர், பழைய பாடத்திட்டத்தில் 1,761 பேரும், மெட்ரிக் பாடப் பிரிவில் 110 பேர்தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக மொத்தம் 42 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்குத் தேவையான வினாத் தாள்கள் வரவழைக்கப்பட்டு கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூரில் இரண்டு மையங்களிலும், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி மற்றும் சிதம்பரத்தில் தலா ஒரு மையங்களிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், கருவேப்பிலங்குறிச்சி மற்றும் காட்டுமன்னார்கோவில் என மாவட்டத்தில் 12 மையங்களில் தலா இரண்டு அதிகாரிகள் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைத்து ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு பணியில் ஒவ்வொரு மையத்திற்கும் தலைமை கண்காணிப்பாளர், துறை அலுவலர் என தலா ஒருவர் என 250 பேரும், தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 2,500 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க 39 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 25 குழுவும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 15 குழுவும் தொடர்ந்து தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும், தேர்வுத்துறை துணை இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் நான்கு சிறப்பு தனி பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாணவரை பார்த்தோ அல்லது அடுத்த மாணவரின் விடைத்தாளை வாங்கி வைத்து எழுதினாலோ, "பிட்' வைத்திருந்தாலோ சம்மந்தப்பட்ட மாணவரின் அன்றைய தேர்வை ரத்து செய்வதோடு, அடுத்த மூன்று ஆண்டு பொதுத் தேர்வை எழுதுவது தடை செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment