இதேபோல் நெல்லிக்குப்பம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று அதிகாலை
சாரல்மழை பெய்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து மேகம் மப்பும்
மந்தாரமுமாக உள்ளது.
புதுவையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. புழுக்கம் தாங்காமல்
மக்கள் கஷ்டப்பட்டு வந்தார்கள். இந்த நிலையில் இன்று காலை திடீரென்று லேசாக மழை
பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த
நிலையில் திடீரென்று மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment