பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை எல்லைக்குட்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கடந்த பல வருடங்களாக அகரம் (சேவாதமந்திருக்கு அருகில் – பூங்காவிற்கு எதிரில்) இயங்கி வருவதை நாம் அறிவோம்.
அரசின் உதவித் தொகைகளான முதியோர், கைவிடப்பட்டோர், அனாதை, மாற்றுத் திறனாளிகள் உட்பட இன்னும் பல அரசுத்திட்டங்களுக்கான ஆவனங்களை பரீசிலித்து கையொப்பமிடும் அதிகாரி இந்த அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். இதற்காக சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட R.I (டிரைனிங்) தனது சொந்த நலனுக்காக எவ்வித அனுமதியுமின்றி தனது அலுவலகத்தை முட்லூருக்கு மாற்றிக் கொண்டார்.
சின்னூர், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை மற்றும் பரங்கிப்பேட்டை மக்களுக்கு பலனளிக்கும் அலுவலகம் முட்லூருக்கு மாற்றப்பட்டதில் மக்களுக்கு அவதி ஏற்பட்டதை அறிந்த நாம் மேற்கொண்டு இது குறித்து அறிய இறங்கினோம்.
PNOTIMES சார்பாகவும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும் சிதம்பரம் வட்டாச்சியரை சந்தித்தோம். பரங்கிப்பேட்டை அலுவலகம் மாற்றப்பட்டது தனக்கு தெரியாது என்று கூறியவர் உடடியாக சம்பந்தப்பட்ட R.I யை தொடர்புக் கொண்டு விலாசினார். ”எவ்வித அனுமதியும் பெறாமல் இப்படி நீங்களாக முடிவெடுத்து மாற்றிக்கொண்டால் பப்ளிக்கிற்கு யாரைய்யா பதில் சொல்வது?” என்று கேட்டு கண்டித்தார். ஆனாலும் இது குறித்து கோட்டாச்சியரை சந்திக்குமாறு கூறினார்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டக் கடிதத்தை சிதம்பரம் கோட்டாச்சியரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரினோம். மீண்டும் பழைய இடத்துக்கே அவர் பணிக்கு வருவார் என்று கோட்டாச்சர் வாக்களித்தார்.
அலுவலக பழது, இதர பிரச்சனையென்றால் அதை மேலிடத்துக்கு சுட்டிக் காட்டி உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படியே மாற்றங்கள் நடைப்பெற வேண்டும். அப்படியே அலுவலக மாற்றம் என்றாலும் அது பரங்கிப்பேட்டைக்கு உள்ளே வரவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அலைச்சல் குறையும். சொந்த நலனுக்காக அதிகாரிகள் அவர்களாக இடம் மாற்றிக் கொள்வது தவறாகும். மக்கள் நலனுக்காகத்தான் அதிகாரிகள் இதை அவர்கள் புரிந்து நடப்பது நல்லது.
VERY GOOD T N T J & PNO TIMES
ReplyDelete