அறிவிப்புக்கும் அதிகமான நேரம் மின்வெட்டை அமல்படுத்தும் மின்வாரியத்தைக் கண்டித்து, நெல்லிக்குப்பத்தில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடந்தது.
நெல்லிக்குப்பத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 4 மணி நேரம். ஆனால் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. விவசாயத்துக்கு 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின்சாரம் எப்போது வரும்?, எப்போது நிறுத்தப்படும்? என்ற முன்னறிவிப்பை மின்சார வாரியம் வெளியிடுவதே இல்லை. தண்ணீரின்றி கரும்புப் பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. கடுமையான மின்வெட்டைக் கண்டித்தும், மக்களின் சிரமங்களை சற்றும் பொருள்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் மின்சார நிறுத்தம் செய்வதைக் கண்டித்தும் இந்த கடையடைப்புப் போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை நெல்லிக்குப்பத்தில் கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன.
இதன் காரணமாக நெல்லிக்குப்பத்தில் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
No comments:
Post a Comment