Islamic Widget

March 12, 2012

ஜமாஅத்திற்கு வந்த காஸ் ஏஜன்ஸி



பரங்கிப்பேட்டை: காஸ் (GAS) வினியோகத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பில்லுக்கு அதிகமாக 21.50 (இருபத்தி ஒரு ரூபாய் ஐம்பது பைசா) வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது 398.50 (முன்னூற்றி தொண்ணூற்றெட்டு ரூபாய் ஐம்பது பைசா) பில் போடப்பட்டு 420 (நானூற்றி இருபது ரூபாய்) வசூலிக்கப்பட்டு வந்தது. இது குறித்து “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” வழியாக காஸ் நிர்வாகத்தை தொடர்புக் கொண்ட போது, “மேலதிகமாக பணம் வசூல் செய்வதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை” என்ற பதில் கிடைத்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாம் தொடர்புக் கொண்டதால் காஸ் நிர்வாகம் நம்மோடு பேசுவதற்கு தயாரானார்கள். ஊரில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் இருப்பதால் அங்கு வைத்து பேசிக் கொள்ளலாம் என்று நாம் கூறினோம். இதைத் தொடர்ந்து இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வந்த காஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.

“காஸ் டெலிவரியின் போது ஏதாவது டிப்ஸ் கொடுப்பது அவரவர் சொந்த விருப்பம். நாங்கள் யாரிடமும் கூடுதலாக பணம் வாங்க சொல்லவில்லை. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டெலிவரி பண்ணும் பையன் ஏதாவது பிரச்சனை பண்ணினால் எங்களைத் தொடர்புக் கொள்ளுங்கள்” என்று நிர்வாக தரப்பில் கூறப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் போதுதான் பல இடங்களில் 420தை கடந்து 425, 430, 440 என்று பலவாறு வசூல் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
காஸ் இறக்கி, ஏற்றுவதில் உள்ள சிரமத்தைக் கருதி மேலதிகமாக 5 ரூபாய், மாடிவீடுகள் என்றால் 10 ரூபாய் கொடுக்கலாம் என்று நுகர்வோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுவே முடிவானது.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் நூர் முஹம்மது தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஜமாஅத் நிர்வாகிகளும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
காஸ் வினியோகம் கவனிக்க வேண்டியவை.
  • SMS வழியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ காஸ் பதிவு செய்யப்படுகின்றது. நேரடிப் பதிவு இல்லை.
  • பதிவு செய்த 21 நாட்கள் கழித்து நுகர்வோருக்கு காஸ் வழங்க வேண்டும்
  • உங்களுக்கு காஸ் டெலிவரியாகும் 48 மணி நேரத்துக்கு முன் உங்களுக்கான டெலிவரி பில் பிரிண்டாகி விடும். 48 மணி நேரத்தில் டெலிவரி செய்யப்படும் என்ற குறுஞ்செய்தி (SMS) உங்கள் அலைப்பேசிக்கு வந்து விடும்.
  • செய்தி வந்த 2 நாட்களுக்குள் உங்களுக்கு காஸ் வினியோகிக்கப்படவில்லை என்றால் நீங்கள் அன்னலட்சுமி காஸ் ஏஜன்ஸியைத் தொடர்புக் கொள்ளுங்கள். (ஒருவேளை உங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காஸ் பிறருக்கு வழங்கப்பட்டு மேலதிகப் பணம் பெறப்படலாம் இது நிர்வாக கவனத்திற்கு செல்லாமல் நடப்பதாக தகவல் கிடைப்பதால் குறுஞ்செய்தி வந்தவுடன் உங்கள் காஸைப் பெறுவதற்கு முனைப்புக் காட்டுங்கள்)
  • காஸ் டெலிவரி செய்யப்படும் போது அவசியம் அதற்கான பில்லை வாங்குங்கள். பாருங்கள்.
  • காஸ் வினியோகிப்பவர்களின் சிரமத்தை நீங்கள் உணர்ந்தால் 5 ரூபாயோ, 10 ரூபாயோ கொடுங்கள். இது முழுக்க உங்கள் சொந்த விருப்பதைச் சார்ந்தது. (கொடுக்காமல் இருந்தாலும் அதுவும் உங்கள் விருப்பம் தான்) ஆனால் எக்காரணம் கொண்டும் 10க்கு மேல் கொடுக்க வேண்டாம் (பேச்சுவார்த்தை முடிவு)
  • காஸ் டெலிவரி செய்யும் போது மேலதிக பணம் கேட்பது போன்ற பிற பிரச்சனைகளை சந்தித்தால் தயங்காமல் காஸ் ஏஜன்ஸியில் புகார் செய்யுங்கள்.
  • தொடர்பு எண்: 04144243383

1 comment:

  1. very useful step. other jamaath may also follow this at the earliest to ease the difficulties of the consumers.

    ReplyDelete