பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக கடந்த 12-ந் தேதி அதன் புதிய தலைவராக டாக்டர் எஸ்.நூர் முஹம்மது பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, ஜமாஅத்தின் நிர்வாகிகளை முறையாக அறிவிக்கப்பட்டு அறிமுகமும் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று ஜமாஅத் அலுவலகத்தில் உறுதி மொழியேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இஸ்லமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் டாக்டர் நூர் முஹம்மது முன்னிலையில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்படி, துணைத் தலைவர்களாக எம்.எஸ். அலி அக்பர், மற்றும் எஸ். முஹம்மது அலியும்;
பொதுச் செயலாளராக ஓ. முஹம்மது கவுஸ், பொருளாளரக (ஜமாஅத் & பைத்துல்மால்) எம்.கே. கலிக்குஜ் ஜமானும்;
செயலாளர்களாக ஜி.முஹம்மது அன்சாரி, எம். சுல்தான் அப்துல் காதர், எ. முஹம்மது ஹனீபா, எ. ஹபீபுல்லாகான், எம்.ஒய். முஹம்மது ஹனீபா ஆகியோரும்;
பைத்துல் கமிட்டி துணைத் தலைவராக அப்துல் காதிர் உமரி, நிர்வாகிகளாக, ஐ. ஹபீப் முஹம்மது, எம்.எம். முஹம்மது முராது, ஜி. நிஜாமுத்தீன், எஸ். முஹம்மது அப்துல் காதர், எஸ்.ஏ. ரியாஸ் அஹமது, ஹெச்.எம். காமில் ஆகியோர் உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மேலும், ஜமாஅத் துனைத் தலைவர்களான எஸ்.ஓ. செய்யது ஆரிப், ஓ.எ.டபிள்யூ.பாவாஜான்; செயலாளர்களான ஹெச். ஷாஜஹான், எ. முஸ்தபா ஆகியோர் இன்று அல்லது நாளை பொறுப்பேற்றுக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.
நன்றி: pnotimes
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇந்த கருத்து நீக்கப்பட்து
Delete