Islamic Widget

November 18, 2011

தமிழகம்: பஸ், பால், மின்சாரம் விலை உயர்வு



தமிழகத்தில் பேருந்து கட்டணம், மின்சார கட்டணம், ஆவின் பால்விலை ஆகியன உயர்த்தப்பட்டுள்ளன. இத்தகவலை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தப்பட்டுள்ளது. அட்டைதாரர்களுக்கு சமன்படுத்திய பால் இனி லிட்டருக்கு ரூ 24-க்கு விற்கப்படும். உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது


பேருந்து கட்டணத்தைப் பொறுத்த அளவில்,சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 42 பைசா என்றும்; விரைவு, மற்றும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 32 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 56 பைசா என்றும்;சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 38 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 60 பைசா என்றும்;  அல்ட்ரா டீலக்ஸ்  புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 52 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 70 பைசா என்றும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக, இதர பகுதிகளில் தற்போதுள்ள குறைந்த பட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து  3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும்; சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணம்  2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து  14 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு போதிய நிதி உதவி அளிக்காததே இந்த கட்டணங்கள் உயர்த்தப்படுவற்குக் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மின்சாரம் விலை இன்னும் உயர வில்லை. விலையை உயர்த்த அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

No comments:

Post a Comment