பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மீனவர் வலையில் கருங்கல் அம்மன் சிலை கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். மீனவர். இவர் நேற்று சாமியார்பேட்டை கடற்கரையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வலையை இழுத்த போது இரண்டரை அடி உயரமுள்ள கருங்கல் அம்மன் சிலை வலையில் சிக்கியிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த கிராமத்தினர் கருங்கல் அம்மன் சிலையை கடற்கரையோரம் உள்ள வேப்பமரத்தில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். அம்மன் சிலை கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment