பி.எஸ்.என்.எல்., தமிழக தொலைபேசி வட்டத்தில், 3 லட்சத்து 88 ஆயிரத்து 89 அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்களும், சென்னை வட்டத்தில், 3.5 லட்சம் அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்களும் உள்ளனர்.சேவையில், அடிக்கடி பழுது மற்றும் பழுது நீக்குதலில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு குளறுபடியால், இணைப்பை, "சரண்டர்' செய்யும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பற்றாகுறை:
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, புதிய "பிராட்பேண்ட்' இணைப்பு கோரும் வாடிக்கையாளர்களுக்கு, "மோடம்' மற்றும் தொலைபேசி இயந்திரப் பற்றாக்குறையால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைப்பை வழங்குவதில் பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.மேலும், "பிராட்பேண்ட்' இணைப்புக்கான உபகரணங்களை, வெளிச் சந்தையில் வாங்க வாடிக்கையாளர்களை, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளே வற்புறுத்துவதால், பெரும்பாலானோர் பி.எஸ்.என்.எல்., இணைப்பை பெறத் தயங்குகின்றனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத பி.எஸ்.என்.எல்., அதிகாரி கூறியதாவது: "மோடம்' மற்றும் தொலைபேசியை, வெளிச்சந்தையில் வாங்க வாடிக்கையாளரை வற்புறுத்துவது உண்மை. காரணம், தொலைபேசியில் தொடர் பழுது, வாடிக்கையாளர்கள் கருவிகளைக் கையாளுவதில் கவனக்குறைவு போன்ற காரணங்களால், நிர்வாகத்திற்கு கூடுதல் செலவாகிறது.கடந்த நிதியாண்டில், தணிக்கைக்கு முந்தைய கணக்குப்படி, பி.எஸ்.என்.எல்.,க்கு 6,000 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியால், பழுதான கருவிகளை உடனே சரி செய்யவும், வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப கருவிகளை மாற்றி வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.இதை கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் முதல், "மோடம்' உள்ளிட்ட பிராட்பேண்ட் இணைப்பிற்கு தேவையான கருவிகளை வழங்குவதை, நிர்வாகம் கணிசமாகக் குறைத்துள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால், வாடிக்கையாளர்களை மேலும் இழக்க நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, "பிராட்பேண்ட்' இணைப்புக்காக தவமிருக்கும் சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:கடந்த 12 ஆண்டுகளாக, பி.எஸ்.என்.எல்., "லேண்ட்லைன்' சேவையை பயன்படுத்துகிறேன். புதிதாக, தனி தொலைபேசி இணைப்புடன் கூடிய, "பிராட்பேண்ட்' வசதியைப் பெற, கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி, "ஆன்-லைனில்' பதிவு செய்தேன். இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் இணைப்பு கிடைக்கவில்லை."எக்ஸ்சேஞ்ச்' அதிகாரிகளை கேட்டால், "மோடம்', தொலைபேசி பற்றாக்குறையாக உள்ளது. அவசரம் என்றால் வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள்' என, அலட்சியமாக பதிலளிக்கின்றனர்.இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.
"மோடம்' தொடர்பு அமைக்கும் பணி முகவர்களிடம் ஒப்படைப்பு* புதிய வாடிக்கையாளரை இழக்கும் ஆபத்து:
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக, 2007ம் ஆண்டு ஜூலையில்,"நேரடி விற்பனை முகவர்' என்ற திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அமல்படுத்தியது. தமிழகம் முழுவதும் 5,624 பேர், பி.எஸ்.என்.எல்., நேரடி விற்பனை முகவர்களாக உள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.பி.எஸ்.என்.எல்.,"பிராட்பேண்ட்' இணைப்பிற்காக பதிவு செய்தவுடன், தொலைபேசி மற்றும் "மோடம்' கட்டமைப்பு உள்ளிட்டவற்றை நிறுவுதல் பணியை, பி.எஸ்.என்.எல்., ஊழியர்களே செய்து வந்தனர்.தற்போது, இந்த பணியை, நேரடி விற்பனை முகவர்களிடம் பி.எஸ்.என்.எல்., ஒப்படைத்துள்ளது.ஏற்கனவே, பி.எஸ்.என்.எல்., வருவாயை, நேரடி விற்பனை முகவர்கள் சுரண்டுவது குறித்து,"தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மோடம் கட்டமைக்கும் பணியையும் இவர்களிடம் ஒப்படைத்தால், வாடிக்கையாளரிடம் மறைமுகமாக அதிக கட்டணத்தை வசூலிக்கக்கூடும். இதனால், இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:
Post a Comment