Islamic Widget

October 11, 2011

பிச்சாவரம் புதிய ரேஞ்சர் வனப்பகுதிகளில் ஆய்வு



கிள்ளை : கிள்ளை அடுத்த பிச்சாவரம் வனப்பகுதி புதிய ரேஞ்சர் வனப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிள்ளை பகுதியில் உள்ள தரிசு நிலங்கள் வனத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இதற்கான வனத்துறை சார்பில் அதிகாரிகள் மற்றும் உழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட எல்லையில் இருந்து பரங்கிப்பேட்டை வரை பிச்சாவரம் வனப் பகுதி கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு ரேஞ்சராக பணியாற்றிய ராஜன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை வனசரக்கத்தில் ரேஞ்சராக பணியாற்றிய ரவிக்குமார் பிச்சாவரம் ரேஞ்சராக பணி மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து பிச்சாவரம், முழுக்குத்துறை, சின்னவாய்க்கால், எம்.ஜி.ஆர்., திட்டுப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு öய்தார். கதிரேசன், திருஞானம், முத்துகுமார் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment