Islamic Widget

October 24, 2011

நான்காவது முறையாக கவுன்சிலர் சிதம்பரத்தில் இருவர் சாதனை

சிதம்பரம் :சிதம்பரம் நகராட்சியில் 4வது முறையாக பா.ம.க., வைச் சேர்ந்த ரமேஷ், அ.தி.மு.க., செந்தில்குமார் இருவரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். சிதம்பரம் நகர மன்றத்தில் 1996 தேர்தலில் பா.ம.க., சார்பில் 14வது வார்டில் பா.ம.க.,வைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் 16வது வார்டில் சுயேச்சையாக செந்தில்குமாரும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதில் பா.ம.க., ரமேஷ் தொடர்ந்து 1996, 2001, 2006, தற்போதைய (2011) தேர்தலிலும் வெற்றி பெற்று தற்போது 4வது முறையாகவும் வெற்றி பெற்று கவுன்சிலர் பதவியை பிடித்துள்ளார்.

அதேப்போன்று செந்தில்குமார் 1996 மற்றும் 2001ல் சுயேச்சையாகவும், 2006ல் அ.தி.மு.க., தற்போதும் (2011) அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 4வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
இருவரும் நான்கு முறையாக ஒரே வார்டில் நின்று வெற்றி பெற்று வார்டை தக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.
அதேப்போன்று முன்னாள் கவுன்சிலர்களான தி.மு.க., வைச் சேர்ந்த ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், வெங்கடேசன், மணிகண்டன், ம.தி.மு.க., சீனுவாசன், காங்., முகமது ஜியாவுதீன், வி.சி., தியாகராஜன், சிகாமணி, சீத்தாராமன், ராஜன் ஆகியோரும் வெற்றி பெற்று மீண்டும் கவுன்சிலர்களாகியுள்ளனர்.
புவனகிரி: பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 1வது வார்டில் காங்., ராம்குமார், 9ல் ம.தி.மு.க., ராஜகோபால், 12ல் பா.ம.க., ரவிச்சந்திரன், 16ல் அ.தி.மு.க., உஷாராணி செல்வகுமார் ஆகியோர் நான்காவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தொடர்ந்து நான்கு முறையாக தங்களது வார்டை தக்க வைத்துள்
ளனர்.
காங்., வேட்பாளர் ராம்குமார் மற்ற வேட்பாளர்களை விட 285 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment