நெல்லிக்குப்பம் :நெல்லிக்குப்பம் நகரமன்ற துணைத் தலைவர் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படுமென தெரிகிறது. நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவி 1996 - 2001 தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. 2006ம் ஆண்டு பொதுவாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க., கூட்டணியில் வி.சி., ஒதுக்கப்பட்டதால் அக்கட்சியைச் சேர்ந்த கெய்க்வாட்பாபு தலைவரானார். இம்முறையும் பொது என்பதால் முஸ்லிம்கள் தலைவர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டினர். நகராட்சிகளின் எண்ணிக்கை உயர்வால் தலைவர் பதவி பொதுவில் இருந்து தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது.
இதற்கு ஆளும்கட்சிதான் காரணம் எனக் கருதிய முஸ்லிம்கள் கறுப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் அ.தி.மு.க., 9, தி.மு.க., 3, வி.சி., 4, பா.ம.க., 2, சுயேச்சை 12 வெற்றி பெற்றனர். இரண்டு சுயேச்சைகள் அ.தி.மு.க., வில் இணைந்ததால் அக்கட்சியின் பலம் 11 ஆனது.
துணைத் தலைவருக்கு 16 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை. துணைத் தலைவர் பதவி முஸ்லிம்களுக்கு கொடுத்தால் சுயேச்சையாக வெற்றி பெற்ற நான்கு முஸ்லிம்கள் ஆதரவு கிடைக்குமென தெரிகிறது.
தங்கள் கட்சியின் மீது முஸ்லிம்கள் கோபமாக இருப்பதை சரிசெய்து, வரும் தேர்தல்களில் அவர்களது ஓட்டை பெற வேண்டுமானால் துணைத் தலைவரை முஸ்லிம்களுக்கு வழங்கி சரிசெய்யலாம் என அ.தி.மு.க., முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.இதனால் அ.தி.மு.க., வில் வெற்றி பெற்ற அப்துல் சலாம், அப்துல் ரஷீது இருவரில் ஒருவருக்கு துணைத்தலைவர் பதவி கிடைக்குமென தெரிகிறது.

No comments:
Post a Comment