Islamic Widget

October 19, 2011

உள்ளாட்சி தேர்தல்: சராசரி 75 சதம் வாக்குப்பதிவு!



இன்று தமிழக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. சராசரியாக 75 சதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து முதல் கட்டமாக நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி உள்பட 10 மாநகராட்சிகள் 60 நகராட்சிகள் 250 பேரூராட்சிகள் 191 ஊராட்சி ஒன்றியங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.
இன்று இரண்டாம் கட்டமாக 65 நகராட்சிகள் 270 பேரூராட்சிகள் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.


தமிழகத்தில் சராசரியாக 75% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கரூரில் 80% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நகராட்சிகள், பேரூராட்சிகளைவிட ஊராட்சிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

அக்டோபர் 21 என்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment