ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தி வரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி வரும் அக்டோபர் மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருவதாக தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 27 ம் தேதியன்று மாலை மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் அத்வானி உரையாற்றுவார் என்றும் மறுநாள் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி, கடையநல்லூர், செங்கோட்டை வழியாக அவரது ரத யாத்திரை செல்லும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரத யாத்திரையை முடித்துக் கொண்டு அத்வானி கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
No comments:
Post a Comment