மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் இருந்தபோது. மக்கள் கூட்டமான பகுதியில் இரவு 8 மணி அளவில் அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் மக்கள் அலறியடித்தப்படி அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள்.
அடுத்த சில நிமிடங்களில் அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அந்த கட்டிடமே குலுங்கி நொறுங்கியது. குண்டுவெடிப்பில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

No comments:
Post a Comment