Islamic Widget

September 18, 2011

பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்



பரங்கிப்பேட்டை : சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் தேசிய அளவிலான நீர் உயிர் நச்சு கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடந்தது.கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய புல முதல்வர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். உதவி பேராசிரியர்கள் பிரகதீஸ்வரன், ராபி முன்னிலை வகித்தனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசுகையில், "கடல் உயிரினங்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் மூலக்கூறுகள் மற்றும் வேதிய கூட்டு சேர்மங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.இதனால் இந்த தேசிய நீர் உயிர்நச்சு கருத்தரங்கம் உயிர் மருத்துவ தொழில்நுட்பம், நோய் தாக்கவியல், உயிர்வேதியியல், செய்முறை மருந்தியல், புற்றுநோய் உயிரியியல், நரம்பு அறிவியல் மற்றும் நுண்ணியல் துறைகளின் பயன்பாடுகள் ஆராய்ச்சிக்கு பெரிதும் துணை புரிகின்றன' என்றார்.சென்னை தேசிய கடல் தொழில் நுட்ப நிறுவனத்தின் "ஜி' விஞ்ஞானி வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கருத்தரங்கில் கொல்கத்தா, லக்னோ, கோவா, கொச்சின், பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்தனர்.உதவி பேராசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


Source: dinamalar

No comments:

Post a Comment