Islamic Widget

August 23, 2011

சலங்கார தெரு பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது



சிதம்பரம்: கடந்த மாதம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முஸ்லிம் சகோதரர்களுக்கும் சலங்கார தெருவை சேர்ந்த மீனவ சகோதரகளுக்கும் மோதல் ஏற்ப்பட்டு இரு தரப்பிலும் தலா மூன்று பேர் சிறை சென்றனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்ப்பட்டு பரங்கிப்பேட்டையில் போலீசார் குவிக்கப்பட்டுயிருந்தனர். இதனால் இரு சமுதாய மக்களிடமும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது.
இதனை போக்கும் வகையில் இரு தரப்பு சமுதாய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து சிதம்பரம் ஆர்.டி.ஒ (RDO) இந்துமதி அவர்களின் தலைமையில் சிதம்பரம் ஆர்.டி.ஒ (RDO) அலுவலகத்தில் (23.08.2011) இன்று காலை பீஸ் மீட்டிங் (சமாதன கூட்டம்) நடைப்பெற்றது.இதில் இரு தரப்பு பஞ்சாயத்து தலைவர்கள் கை குலுக்கி சமதானம் செய்து கொண்டனர்.   இதில் ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ், TNTJ முத்துராஜா, ஃபாஜுல் உசேன் மற்றும் முக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சலங்கார தெரு பஞ்சாயத்து சார்பில் செழியன் மற்றும் பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



இனி வரும் காலங்களில் யாரவது பிரச்சினை செய்தால் பஞ்சாயத்தில் வைத்து பேசுவது மீறி கட்டுபடாதவர்களை காவல்துறையில் ஒப்படைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சிதம்பரம் தாசில்தார், டி.எஸ்.பி.நடராஜன் மற்றும் பரங்கிப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் நீண்ட நாட்களாக இரு தரப்பினர்யிடம் ஏற்ப்பட்டு வந்த மோதல் போக்கு ஒரு முடிவுக்கு வந்தது. இந்த கூட்டத்திற்க்கு ஏற்பாடு செய்த சிதம்பரம் ஆர்.டி.ஒ (RDO) இந்துமதி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
 
நன்றி: tntjpno

No comments:

Post a Comment