Islamic Widget

May 08, 2011

பரங்கிப்பேட்டை: மீன் வாங்க எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் பரபரப்பு!

பரங்கிப்பேட்டை: வழக்குளை வாபஸ் பெறும் வரை அன்னங்கோயிலில் மீன்களை வியாபாரிகள் வாங்கக் கூடாது என தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் வெளியூர் மீன்களை வாங்க விசைப்படகு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீன் வியாபாரிகளுக்கும், விசைப்படகு சங்கத்தினருக்குமிடையே மோதல் ஏற்பட்டு மீன் வியாபாரிகளின் 6 மினி வேன்கள் உடைக்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டி.எஸ்.பி., நடராஜன், தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், வரும் மே மாதம் 6ம் தேதி வரை அந்தந்த பகுதியில் பிடிக்கும் மீன்களை அந்தந்த பகுதிகளிலும் அதன் பிறகு வழக்கம் போல் பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் விற்பனை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று கடலூர் ராசாப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துகொண்டு அன்னங்கோயிலில் விற்பனை செய்ய வந்தனர். அப்போது சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர்கள், விசைப்படகு சங்கத்தினர் மீது போடப்பட்டுள்ள வழக்களை வாபஸ் பெறும்வரை மீன்களை வியாபாரிகள் வாங்கக்கூடாது என தடுத்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையெடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாமியார்பேட்டையை சேர்ந்தவர்களிடம் சமாதானம் செய்தனர். அதையெடுத்து மீன் வியாபாரிகள் மீன்களை வாங்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

source: dinamalar photos pno.news

No comments:

Post a Comment