கடலூர் : கார் டிரைவரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் நூருல் (27). கார் டிரைவர். பள்ளி வாசல் தெருவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நேற்று முன்தினம் சாப்பிட வந்தார். அப்போது அங்கிருந்த இருசப்ப செட்டித் தெருவைச் சேர்ந்த ராஜன் (28), வெங்கடேசன் (28), ராஜி (28) ஆகியோர் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மூவரும் இந்தியா வெற்றி பெறும் என சத்தமாக கூறினர்.
இப்பகுதியில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள் என நூருல் கூறினார். இதனால் ஏற்பட்ட தகராறில் தாக்கிக் கொண்டனர். இருதரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து ராஜன், வெங்கடேசனை கைது செய்தனர். நூருல், ராஜியை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment