சிதம்பரம்: ""கொள்கை உறுதியுடைய கம்யூ., கட்சி, எப்படி அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் தி.மு.க., கூட்டணி வேட்பாளர், மூ.மு.க., ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து, பா.ம.க., பிரசார பொதுக்கூட்டம், சிதம்பரத்தில் @நற்று முன்தினம் இரவு நடந்தது. மாவட்டச் செயலர் வேணு புவனேஸ்வரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தி.மு.க., கூட்டணி, சமூக நீதி கூட்டணி. பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட கூட்டணி. இந்த கூட்டணி, தமிழகம் முழுவதும் வெற்றி பெறும். எதிரணி அ.தி.மு.க., கூட்டணியில், எந்த கொள்கையும் இல்லை. தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு நடிகருடன் கூட்டணி; அவர் பொது இடத்தில் வேட்பாளரை அடிக்கிறார். கொள்கை உறுதியுடைய கம்யூ., கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் எப்படி இருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. எப்படி கூட்டணி சேர்ந்தனர் என்று கூட தெரியவில்லை. மக்கள் நிம்மதியுடனும், நலமுடனும் வாழ, மீண்டும் தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
Source: Dinamalar

No comments:
Post a Comment