பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி இரு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர். புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் குடிபிரியர்கள் தொல்லை அதிகரித்து வந்தது. இதனால் இரு பிரிவினரிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட தியாகவள்ளி, கம்பிளிமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் 25 பேர் திடீரென டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களில் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Source: Dinamalar

No comments:
Post a Comment