பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பகுதியில் மொபைல் போன் டவரில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 பேட்டரிகளை திருடிய பலே ஆசாமிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள ஓடாபோன் மொபைல்போன் டவர்களில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 பேட்டரிகள் திருட்டு போயின.
இது குறித்து ஓடாபோன் நிறுவன திட்டப் பொறியாளர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டை போலீசார் சிதம்பரம் - கடலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில் மூவரும் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ராமதுரை (35), பண்ருட்டி மேல்பாதியைச் சேர்ந்த ஜம்புலிங்கம் (43), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலைச் சேர்ந்த மணி (45) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் திண்டிவனம், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், புவனகிரி பகுதியில் மொபைல்போன் டவர்களில் உள்ள பேட்டரிகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 24 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
Source: Dinamalar

No comments:
Post a Comment