மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கு ம் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்து வதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்பு தல் அளித்தது.போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்வது, அளவுக்கு அதிகமான வேகம், வாகனம் ஓட் டும்போது செல்போன் பயன்படுத்துவது போன்ற விதி மீறல்களுக்கும்
கடும் தண்டனை வழங்குவதற்கு புதி ய விதிமுறைகள் வகை
செய்கின்றன. போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறு வோரைக் கடுமையாகத் தண்டிக்கும் வகையில் அவர்களுக்கு கூடுதல் அபராத மும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். விபத்துகளால் பாதிக்கப்படுவோரு க்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
மோட்டார் வாகனச் சட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் இந்தத் திருத்தங்கள் தொடர்பான மசோதா வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெல்மெட், சீட் பெல்ட்...
விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டினாலும், சீட் பெல்ட், ஹெல்மெட் போன்றவற்றை அணியாவிட்டாலும் கடும் தண்டனை கிடைக்கும்.
"மீண்டும் மீண்டும் விதிமீறலில் ஈடுபடுவதைத் தடுப்பதையே இந்தத் திருத்தங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கின்றன' என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மது அருந்தினால்... மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ. 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதமும் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
100 மி.லி. ரத்தத்தில் 30 மில்லி கிராம் அளவுக்கு ஆல்கஹால் இருந்தால் போதையில் வாகனம் ஓட்டுவதாகக் கருதப்படும். ஆல்கஹாலின் அளவு 30 முதல் 60 மி.கி. வரை இருக்கும்பட்சத்தில் ஆறு மாத சிறைத்தண்டனையோ, ரூ. 2 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். 150 மி.கி. வரை ஆல்கஹால் இருப்பது தெரியவந்தால் ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். 3 ஆண்டுகளுக்குள் இதே குற்றத்தை மீண்டும் செய்தால் சிறைத்தண்டனை 3 ஆண்டுகளாகவும் அபராதம் ரூ. 8 ஆயிரமாகவும் அதிகரிக்கப்படும்.
150 மி.கி. மேல் ஆல்ஹகால் இருந்தால், முதல் முறை சிக்கும்போது ரூ. 5 ஆயிரம் அபராதமும் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் கிடைக்கும். இரண்டாவது முறை அதே தவறைச் செய்தால் ரூ. 10 ஆயிரம் அபராதமும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
பிற போதை வஸ்துகளைப் பயன்படுத்தினாலும் தண்டனை உண்டு. ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்படும். எனினும் போதை வஸ்துகளைப் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு இப்போதிருக்கும் அதிகபட்ச சிறைத்தண்டனையான இரு ஆண்டுகள் என்பது 6 மாதங்களாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
சிவப்பு விளக்கைக் கடந்தால்... போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது அதைக் கடந்து செல்வோருக்கு ரூ. 100 முதல் ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு ரூ. 300 முதல் - ரூ. 1500 வரை அபராதம் விதிக்கப்படும்.
அதிவேகமாகச் சென்றால்... சாலையில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான வேகத்தில் வாகனம் ஓட்டினால் ரூ.400 முதல் ரூ. ஆயிரம் வரை அபராதம் விதிப்பதற்கு புதிய விதிமுறைகள் வழிவகுக்கின்றன. இதே குற்றம் இரண்டாவது முறை செய்யப்பட்டால், ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆபத்தான வகையில் ஓட்டினால்... ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ. 2ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம்: போக்குவரத்து விதிமுறை அமல்படுத்துவதில் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு புதிய திருத்தங்கள் வழிவகை செய்கின்றன. ஓட்டுநர் உரிமம், பதிவு அட்டைகள், தகுதிச் சான்றுகள், வாகன அனுமதிகள் போன்றவற்றை வழங்குவது, மேல்முறையீடுகளுக்குத் தீர்வு காண்பது போன்வற்றில் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்குப் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment