சிதம்பரம் : சிதம்பரத்தில் வெளி மாநிலக் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டார். மோட்டார் பைக் அடித்து நொறுக்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் அசோக்குமார் (22). உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த இவர் கொத்தங்குடிதோப்பு பகுதியில் தங்கியுள்ளார்.
உள்ளூர் மாணவர்கள் சிலருடன் சேர்ந்து அதே கல்லூரியில் படிக்கும் வெளி மாநில மாணவர்களை மிரட்டி பணம் வாங்கி வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று மாரியப்பா நகருக்கு உள்ளூர் வாலிபர்கள் சிலருடன் மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். அசோக்குமார் வருவதை அறிந்து தயாராக இருந்த பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட் போன்ற பகுதி மாணவர்கள் இரும்பு கம்பி, உருட்டு கட்டை ஆகியவற்றால் அவரைத் தாக்கி மோட்டார் பைக்கையும் அடித்து நொறுக்கினர். அவருடன் சென்றவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த அசோக்குமாரை அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் தகராறு ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Source: Dinamalar

No comments:
Post a Comment