புதுடெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள பல கோடிக்கணக்கான கறுப்பு பணம் உள்ளது. அவற்றை இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவருவது என்பது பற்றி ஆய்வு செய்ய பா.ஜனதா ஒரு குழு அமைத்தது.
அந்த குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில், சுவிஸ் வங்கியில் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது. இதை மறுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானிக்கு கடிதம் எழுதினார்.அதற்கு அத்வானி எழுதியுள்ள பதில் கடிதத்தில், பா.ஜ.க. குழு வெளியிட்ட அறிக்கையில் தங்கள் பெயர் இடம் பெற்றதற்காக நான் வருத்தம் அடைகிறேன். அதற்காக பா.ஜ.க. சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் சுவிஸ் வங்கியில் உங்களுக்கு கணக்கு எதுவும் இல்லை என்பதை நீங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment