Islamic Widget

February 19, 2011

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானிக்கு எதிராக சிபிஐ மனு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு எதிரான குற்றவழக்கில் இருந்து இருவரையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ செய்துள்ள மேல் முறையீட்டு மனுவில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கிலிருந்து விடுவித்து அலகாபர் உயர் நீதிமன்றம் முறையற்ற தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் எனவே, அவர்கள் மீதான குற்றவியல் வழக்கை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரி உள்ளது.பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கட்டியார், விஷ்னு ஹரி டால்மியா, உமாபாரதி, பால் தாக்கரே மற்றும் உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு ஒன்றும், டிசம்பர் 6ஆம் தேதியன்று பாபர் மசூதி இடிப்பில் கலந்து கொண்ட அடையாளம் தெரியாக இலட்சக் கணக்கானோர் மீது ஒரு வழக்கும் என இரண்டு வழக்குகள் சிபிஐயால் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை கடந்த 2001ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி தள்ளுபடி செய்தது.சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அலகாபத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 20ஆம் தேதி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment