திருவனந்தபுரத்தில் இன்று காலை ஆற்றில் பள்ளி வேன் கவிழ்ந்தது. இதில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியானார்கள். திருவனந்தபுரம் சாக்கை கரிக்ககம் சாமுண்டி கோவில் அருகே அந்த பகுதியைச் சேர்ந்த 12 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் இன்று காலை புறப்பட்டுச் சென்றது.
ஆற்றங்கரையில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த ஒரு வாகனம், வேன் மீது மோதியது. இதில் வேன் நிலை தடுமாறி ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த குழந்தைகள் பயத்தில் அலறினார்கள். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கி 5 குழந்தைகளும், குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆயா ஒருவரும் பலியானார்கள். மற்ற குழந்தைகள் மீட்கப்பட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

No comments:
Post a Comment