Islamic Widget

February 19, 2011

துணைக் குழுக்களில் இருந்து திமுக அமைச்சர்கள் நீக்கம்!

மத்திய அமைச்சரவையின் துணைக் குழுக்களில் இருந்து அமைச்சர் மு.க. அழகிரி உள்பட திமுக அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.மத்திய அமைச்சரவைக்கான துணை குழுக்களை பிரதமர் மன்மோகன் சிங் மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
 பொருளதார விவகாரங்களுக்கான அமைச்சரவையின் துணைக் குழுவில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இடம் பெற்றிருந்தார். தற்போது மு.க. அழகிரி நீக்கப்பட்டுள்ளார்.அதுபோன்று உள்கட்டமைப்புக்கான அமைச்சரவையின் துணைக் குழுவில் இருந்து மேலும் ஒரு திமுக அமைச்சர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment