செல்பேசி மற்றும் அதற்கான கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சால் பாதிப்பு ஏற்படுகிறதா? என்று ஆய்வு நடத்த மத்திய அரசு 8 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது
அதில் சுகாதாரத்துறை, உயிரி தொழில்நுட்பத்துறை, தொலை தொடர்புத்துறை நிபுணர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் ஆய்வு நடத்தி அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளனர்.அந்த ஆய்வில்,"செல்பேசி மற்றும் செல்பேசி கோபுரத்தில் இருந்து வரும் கதிர்வீச்சால் உடல்நிலை மோசமாகப் பாதிக்கும். ஞாபகமறதி, மனதை ஒருநிலை படுத்த முடியாமை, வயிற்றுக் கோளாறுகள், தூக்கமில்லாமை போன்றவையும் ஏற்படும்.
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும். செல்பேசியில் உள்ள மின்காந்த சக்தி உடலில் உயிர் செல்களை பாதிக்கும்.குழந்தைகள், இளம் பருவத்தினர், கர்ப்பிணி பெண்கள் செல்போன் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.காதில் இரைச்சல், தலைவலி, செரிப்புத் தன்மை பாதிப்பு, இதயநோய் போன்றவை ஏற்படும். குழந்தைகள், சிறுவர்கள் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும். எனவே அவர்கள் செல்போன் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.செல்பேசி கோபுரங்களின் கதிர்வீச்சால் நகரப் பகுதிகளில் வண்ணத்துப்பூச்சி, தேனீக்கள், பூச்சிகள், சிறிய பறவைகள் மறைந்து விட்டன. எனவே மக்கள் அதிக நெருக்கம் உள்ள இடங்கள், பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் அமைக்க கூடாது" என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment