சிதம்பரம் : சிதம்பரம் அருகே, போலி பல்பொடி தயாரித்து விற்பனை செய்தவரை, போலீசார் கைது செய்து, பல்பொடி தயாரிக்க பயன்படுத்திய மிஷினை பறிமுதல் செய்தனர்.கடலூர் மாவட்டம், புவனகிரி தேவாங்கர் தெருவைச் சேர்ந்தவர்
மகேஸ்வரன் (46).இவர், சிதம்பரம் அடுத்த வயலூரில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் குடியிருப்பு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, போலியாக கோபால் பல்பொடி தயாரித்து விற்பனை செய்து வந்தார்.போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார், போலி பல்பொடி தயாரிக்கும் கம்பெனியை நேற்று சுற்றி வளைத்தனர்.விசாரணையில், சலித்து எடுக்கப்பட்ட மணல், வாசனை திரவியங்கள், அதனுடன் லேசான இனிப்பு கலந்த ரசாயன பவுடர், சாம்பல் ஆகியவற்றை கலந்து காய வைத்து, ஒரிஜினல் கோபால் பல்பொடி போன்ற பாக்கெட்களில் நிரப்பி, கடலூர் மட்டுமன்றி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் விற்பனை செய்து வந்ததை ஒப்புக் கொண்டார். மகேஸ்வரனை போலீசார் கைது செய்து, அவர் பயன்படுத்திய மிஷின் மற்றும் போலி பல்பொடி பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
Source: Dinamalar

No comments:
Post a Comment