சிதம்பரம் : தமிழகம் மற்றும் புதுச்சேரி உடற்கல்வித் துறை கல்லூரிகளுக்கிடையே சிதம்பரத்தில் நடந்த விளையாட்டு குழுப் போட்டியில் அண்ணாமலைப் பல்கலை அணி சாம்பியன் பட்டம் வென்றது.சிதம்பரம் அண்ணாõமலைப் பல்கலை உடற்கல்வித்துறை வளாகத்தில் நான்கு நாட்களாக நடந்த போட்டியில் 1,200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
குழு மற்றும் தடகளம் என இரு பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது.குழு விளையாட்டுப் போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலை ஆண்கள் மற்றும் பெண்கள் அணி முதல் இடத்தை பிடித்து சாம்பியன் வென்றது.வெற்றி பெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு நேற்று மாலை விளையாட்டுத்துறை மைதானத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. உடற்கல்வித் துறை பல்கலை துணைவேந்தர் வைத்தியநாதன் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கினார்.குழுப் போட்டிகளில் சாம்பியன் வென்றதற்காக அண்ணாமலைப் பல்கலை விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சிஅளித்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் துறைத் தலைவர் ரவீந்திரன் ஆகியோரை துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி பாராட்டினர்.விழாவில் கல்வி புல முதல்வர் விஸ்வநாதன், முன்னாள் கல்வி புல முதல்வர் மங்கையற்கரசி, பேராசிரியர்கள் பெரியய்யா, ராமகிருஷ்ணரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Source: Dinamalar

No comments:
Post a Comment