சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலையத்தில் பயணியிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.நாகப்பட்டினம் மாவட் டம், நாகூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன். துபாயில் பணிபுரிந்து வருகிறார். விமானம் மூலம் சென்னை வந்த அவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வேளாங்கன்னி அரசு பஸ்சில் வந்தார்.நேற்று அதிகாலை 3 மணிக்கு பஸ் சிதம்பரம் பஸ் நிலையம் வந்தது. சம்சுதீன் சிறுநீர் கழிக்க பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்சை யாரோ பிக்பாக்கெட் அடித்துக் கொண்டு தப்பியோடினார்.திருடு போன பர்சில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துபாய் திராம்ஸ், ஏ.டி.எம்., இன்சூரன்ஸ் கார்டுகள், தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவை வைத்திருந்தார்.சம்சுதீன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment