மகளிர் தினத்தன்று இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் 99 ரூபாயில் பெண்கள் பயணம் செய்யும் சிறப்புத் திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் நாளில் பெண்களை கவுரவப்படுத்தும் வகையிலும் பொது விமானப் போக்குவரத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா பெண்களுக்கு சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.மார்ச் 8ஆம் தேதி ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் எகானமி வகுப்பில் 99 ரூபாய் கட்டணத்தில் பெண்கள் பயணயம் செய்யலாம். வணிக வகுப்புக் கட்டணம் 1,199 ரூபாய்கள். விமான நிலைய வரி மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும்.இந்தக் கட்டணத்தில் இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதற்கான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
Source:inneram

No comments:
Post a Comment