Islamic Widget

February 19, 2011

உலகக் கோப்பைப் போட்டி : சென்னைப் போக்குவரத்தில் மாற்றம்

சென்னை சின்னசாமி மைதானத்தில் நாளை நடக்க இருக்கும் உலகக்கோப்பை போட்டியினைத் தொடர்ந்து சென்னை நகர சாலைகளின் போக்குவரத்தில் மாற்றம் செய்யபட்டுள்ளது.உலகக்கோப்பை போட்டித் தொடரின் இரண்டாவது ஆட்டம், கென்யா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நாளை சென்னையில் நடைபெறுகிறது.

இதையடுத்து நாளை காலை 7.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் சென்னை சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பெல்ஸ் சாலை தற்காலிக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலை சந்திப்பிலிருந்து நோஎண்ட்ரி ஆகவும், வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து எண்ட்ரி ஆகவும் செயல்படுத்தப்படும். குறுக்கு சாலைகளிலிருந்து பெல்ஸ் சாலைக்குச் செல்ல அனுமதி இல்லை. அண்ணா சாலை வழியாக அனுமதிச் சீட்டு இல்லாமல் வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாலாஜா ரோடு, பெல்ஸ் ரோடு, பாரதி சாலை, காமராஜர் சாலை வழியாக சென்று பி.டபிள்யூ.டி. அலுவலக வளாகம் மற்றும் கடற்கரை ஓர சாலையிலும், காமராஜர் சாலை வழியாக அனுமதிச் சீட்டு இல்லாமல் வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் கடற்கரை சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வாலாஜா ரோடு வழியாக பி.டபிள்யூ.டி. அலுவலக வளாகத்திலும் வாகனங்களை நிறுத்தலாம்.போட்டி முடிந்ததும் வாகனங்கள் அனைத்தும் மைதானத்திலிருந்து வெளியில் செல்லும் வரை மேற்கண்ட ஒரு வழிப்பாதை நடைமுறையில் இருக்கும். கெனால் ரோட்டில் பாரதி சாலையிலிருந்து ஒரு வழி பாதையாகவும், வாலாஜா சாலையிலிருந்து நோஎண்ட்ரி ஆகவும் செயல்படுத்தப்படும். வாலாஜா சாலையில் வாலாஜா-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து கெனால் சாலை வரை எந்த வாகனமும் அனுமதிக்கப்பட மாட்டாது.டி எழுத்து சாம்பல் நிறம், டி.எஸ். எழுத்து கத்திரி பூ நிறம் அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் இரு சக்கர வாகனத்தைக் காமராஜர் சாலை, பாரதி சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சாலை, அண்ணா சாலை-அண்ணா சிலை வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சாலை வழியாக வந்து டி.என்.சி.ஏ.வில் நிறுத்த வேண்டும்.வெளிர் மஞ்சள் நிறம் பி எழுத்து கொண்ட அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் காமராஜர் சாலை, பாரதி சாலை, விக்டோரியா ஹாஸ் டல் சாலை, அண்ணா சாலை-அண்ணா சிலை, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சாலை வழியாக வந்து பெவலியனில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.வெளிர் நீல நிறம் (டபிள்யூ எழுத்து) அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் காமராஜர் சாலை, பாரதி சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சாலை வழியாக வந்து வார்டன் குவார்ட்டர்சில் வாகனத்தை நிறுத்த வேண்டும். அடர் சாம்பல் நிறம் (வி எழுத்து) அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் காமராஜர் சாலை, பாரதி சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சாலை, அண்ணா சாலை-அண்ணா சிலை, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சாலை வழியாக வந்து விக்டோரியா ஹாஸ்டலில் வண்டியை நிறுத்த வேண்டும்.அனுமதிச் சீட்டு இல்லா வாகனங்களை அண்ணா சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை, வாலாஜா சாலை வழியாக வந்து யுனிவர்சிட்டி பார்க்கிங் பி.டபிள்யூ.டி. போர்ஷர் ரோட்டில் நிறுத்த வேண்டும். லைட் வைலட் நிறம் (ஆர் எழுத்து), பச்சை கலர் (ஆர்.எஸ். எழுத்து) பாஸ் வைத்திருப்பவர்கள் இரு சக்கர வாகனத்தை அண்ணா சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை, வாலாஜா சாலை வழியாக வந்து ரெயில்வே பேஸ்மென்ட்-ல் நிறுத்த வேண்டும்.
வெளிர் நீலம் நிறம் (எம் எழுத்து) அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை வழியாக வந்து எம்.சி.சி. காம்பவுண்டில் நிறுத்த வேண்டும். அடர் பச்சை நிறம் (பி எழுத்து) அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் அண்ணா சாலை- அண்ணா சிலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை, வாலாஜா சாலை வழியாக வந்து பட்டாபிராம் கேட் பகுதியில் வண்டிகளை நிறுத்த வேண்டும்." என்று காவல் துறை செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment