விபத்துக்களைத் தடுக்க சிதம்பரம் வண்டிகேட்டில் இருந்து பு.முட்லூர் வரை புறவழிச்சாலையில் சென்டர் மீடியா அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொது நல அமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் முருகையன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் - பு.முட்லூர் வெள்ளாற்றில் சாலை மேம்பாட்டுத்திட்டம் மூலம் மேம்பாலம் கட்டி புறவழிச் சாலையாக அமைக்கப்பட்டது.
இவ்வழியில் போக்குவரத்து அனுமதிக்காத நிலையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது. இப்பகுதியில் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி, பள்ளிகள், விடுதி, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இருப்பதால் இச்சாலையில் பயிற்சி வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதுவரை சப் இன்ஸ்பெக்டர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமும் அடைந்துள்ளனர்.அதிகரித்து வரும் விபத்துகளை தடுக்கும் வகையில் வண்டிகேட்டில் இருந்து பு.முட்லூர் வரை சாலையில் சென்டர் மீடியா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டுள்ளது.
Source: dinamalar, Photo: TNTJPNO

No comments:
Post a Comment