Islamic Widget

February 02, 2011

ராசா கைது - திமுகவிலிருந்து நீக்கப்படுவாரா ?

சென்னை: முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ராசா கைது விவகாரம் திமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது ராசாவின் திடீர் கைது திமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2ஜி அலைகற்றை விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ராசாவை தற்காத்து பேசி வந்த கருனாநிதி,
அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் திமுகவிலிருந்து நீக்கப்படுவார் என கூறியிருந்தார். தற்போது ராசா கைது செய்யப்பட்டுள்ளதால், திமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.சில நாட்களுக்கு முன் டில்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேசி சென்னை திரும்பிய முதல்வர் கருனாநிதி, வரும் தேர்தலில் காங்கிரஸூடனான கூட்டனி சுமூகமாக அமையும் என்ற நம்பிக்கை தெரிவித்து இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment