Islamic Widget

February 02, 2011

பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் அந்தரத்தில் தொங்கும் கர்டர்: மீனவர்கள் அச்சம்!

பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் ரயில்வே பாலத்தை யொட்டி பழைய கர்டர் அகற்றப்படாமல் எந்த நேரத்திலும் விழலாம் என்ற நிலையில் இருப்பதால் ஆற்றில் மீன்பிடிக்கும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
 மயிலாடுதுறை - விழுப்புரம் ரயில்வே பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டதையொட்டி பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது. அதற்காக பழைய கர்டரை அகற்ற டெண்டர் விடப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் கர்டர் அகற்றப்படாததால் ரயில்வே நிர்வாகம் துறையினர் கான்ட்ராக்டருக்கு அபராதம் விதித்தது.இருப்பினும் கர்டர் வெட்டி எடுக்கும் பணி நடைபெறவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பழைய கர்டர் புதிய பாலத்தின் மீது விழுந்து பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருந்ததால் பாதுகாப்பு கருதி ரயில்வே நிர்வாகம் பழைய கர்டரை வெட்டி விட்டனர்.இதனால் கடந்த ஒரு ஆண்டாக பழைய கர்டர் எந்த நேரத்திலும் விழலாம் என்ற நிலையில் இருந்து வருகிறது. இதற்கிடையே வெள்ளாற்றில் பரங்கிப்பேட்டை, அகரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் கள்ளத் தோணியில் மீன் பிடித்து வருகின்றனர். புதிய பாலம் அருகே அதிகளவில் மீன் கிடைப்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பழைய கர்டர் விழும் நிலையில் உள்ளதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.


Source: dinamalar Photo: TNTJPNO

No comments:

Post a Comment