நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டிய ரயில்களில், பெண்களுக்கு சிறப்பு படுக்கை வசதி செய்துத்தரப்படும் என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் E.அகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய ரயில்வே இணையமைச்சர் E.அகமது கூறியுள்ளதாவது, நெடுந்தூர பயணிகள் ரயில்களில், கடைசியில் உள்ள கார்டு மற்றும் லக்கேஜ் பெட்டியில், பெண்களுக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,அமலில்உள்ளது.
இதே போன்று படுக்கை வசதி ஒவ்வொரு பெட்டியிலும், இரண்டு லோயர் பெர்த்கள் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், 45 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. அனைத்து வகையான ஏசி பெட்டிகள் உட்பட படுக்கை வசதி கொண்ட பெட்டிகளிலும் இது அமலில் உள்ளது.
தற்போது, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் படுக்கை வசதியுள்ள பெட்டிகளில், 6 இருக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment