இடம்பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கான சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை (12-12-2010) நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடிபெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. முதல் சுற்று முகாம் நவம்பர் 14ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் 26 ஆயிரத்து 188 குழந்தைகள் பயனடைந்தனர்.
கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம், மேம்பாலம், தொழிற்சாலை, நெடுஞ்சாலை, இரயில்வே பணிகள், செங்கல் சூளை, நரிக்குறவர் தங்குமிடம், வேளாண் தொழிலாளர் வசிப்பிடம், மீன்பிடித் தொழிலுக்காக இடம் பெயர்ந்து வாழும் மீனவ பகுதி, சாலையோர குடியிருப்புகள், வாத்து மற்றும் ஆடு மேய்ப்பவர்கள், இலங்கை அகதிகள் ஆகிய இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இந்த முகாம் மூலமாக சுமார் 30 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment