
சவுதி அரேபியா அரசாங்க நிறுவனங்களில் வேலை செய்து வரும் அதிகாரிகளுக்கு விஷம் கலந்த வாசனைத்திரவியங்களை பார்சல் மூலம் அன்பளிப்பு அனுப்புவது போல அனுப்பி அவர்களைக் கொலை செய்ய அல்காய்தா கொலை செய்ய முயற்சித்துள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் அங்கு 149 அல் காய்தா இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களி்ல் 25 பேர் வெளிநாட்டவர்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இந்த தகவல் கிடைத்ததாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அதுபோல் தங்களது நடவடிக்கைகளின் பொருளாதாரத்திற்காக வங்கிகளையும் நிறுவனங்களையும் கொள்ளை அடிக்க அவர்கள் திட்டம் போட்டிருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களுக்கும் சோமாலியா மற்றும் எமனிலுள்ள தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அல்காய்தா அமைப்புக்காக சவுதியில் ஆட்களை சேர்த்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Source:.inneram
No comments:
Post a Comment