
சென்னை: தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக் கடலில் இருந்து அரபிக் கடலுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறிய போதிலும் காற்றழுத்த தாழ்வுநிலை இடம் மாறினாலும் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அங்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா, ராயலசீமா, கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகாவில் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு உள் கர்நாடகா, இலட்சத்தீவு, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Source:.inneram
No comments:
Post a Comment