
வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் புதுவையில் கடந்த சில வாரங்களாக மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன், வெள்ளச் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இப்படி தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் புதுவையில் பகலில் குளிர்ந்த காற்று வீசுகிறது. இரவில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. கட்டிட சுவர்கள் மற்றும் தரை என அனைத்தும் ஐஸ்கட்டி போல் குளிர்ந்து காணப்படுகிறது. பெரும்பாலானோர் குளிருக்கு பயந்து இரவில் போர்வை, கம்பளிக்குள் உறங்குகின்றனர்.
இந்நிலையில் கனமழைக்கு குடை விற்பனை சூடு பிடித்ததுடன் கடுங்குளிரை தாங்கும் வகையில் ஸ்வெட்டர், கம்பளி, மப்ளர் மங்கிகேப் போன்ற குளிரை தாங்க்கூடிய ஆடைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது பகலில் சூரியனை காண்பதே அரிதாகி விட்ட புதுவையில் நேற்று இரவு விட்டு, விட்டு மழை பெய்தது. இன்று காலையில் லேசாக தூறியது. வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுவதால் ரம்மியமான சூழல் நீடிக்கிறது. இது சுற்றுலா பயணிகளை, குறிப்பாக வெளிநாட்டினரை கவர்ந்துள்ளது.
கடலில் அலையின் சீற்றம் தொடர்ந்து நீடிப்பதால் புதுவை மீனவர்கள் இன்று 5-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.காரைக்காலில் இன்று பெரும்பான்மையான மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. புதுவை கடல் அலைகளின் சீற்றத்தால் கடற்கரை நடைபாதையின் பாதி தூரம்வரை கடல் நீர் வந்து சென்றது.
No comments:
Post a Comment